டெஸ்ட், ஒருநாள் லீக் தொடர்களை நடத்த ஐசிசி ஒப்புதல்!

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன...
டெஸ்ட், ஒருநாள் லீக் தொடர்களை நடத்த ஐசிசி ஒப்புதல்!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் லீக் தொடர்களை நடத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. 

ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

டெஸ்ட் லீகில் 9 அணிகளும் ஒருநாள் லீக்கில் 13 அணிகளும் விளையாடவுள்ளன.

டெஸ்ட் லீகில் பங்குபெறும் 9 அணிகளும் இரண்டு வருட இடைவெளியில் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். அதில் மூன்று தொடர்கள் உள்ளூரிலும் மூன்று தொடர்கள் வெளிநாட்டிலும் நடத்தப்படவேண்டும். டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் 2 டெஸ்டுகளும் அதிகமாக 5 டெஸ்டுகளும் இடம்பெறவேண்டும். டெஸ்ட் லீக் 2019 முதல் 2021 வரை நடைபெறும். 

மேலும் 2019 வரை நான்கு நாள் டெஸ்ட் போட்டிகளுக்கும் ஐசிசி அனுமதி அளித்துள்ளது. 

ஒருநாள் லீகில் 13 அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒருநாள் லீக் 2020-ல் ஆரம்பிக்கவுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு அணியும் நான்கு உள்ளூர் போட்டிகளிலும் நான்கு வெளிநாட்டு போட்டிகளிலும் பங்கேற்கவேண்டும். ஒவ்வொரு ஒருநாள் தொடரும் மூன்று போட்டிகளைக் கொண்டிருக்கவேண்டும்.

இதுகுறித்து ஐசிசி தலைவர் சஷாங்க் மனோகர் கூறும்போது: இனிமேல் நடைபெறும் ஒவ்வொரு சர்வதேசப் போட்டிகளுக்கும் ஓர் அர்த்தம் இருக்கும். ஒவ்வொரு வெற்றிகளுக்கும் மதிப்பு இருக்கும். இதனால் ரசிகர்களிடையே கிரிக்கெட் போட்டிகள் மீதான ஆர்வம் மேலும் அதிகரிக்கும். ஐசிசியின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com