பிறந்த நாள் அன்று அனில் கும்ளேயை சங்கடப்படுத்திய பிசிசிஐ! 

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வெளியிட்டு, பின்னர் நீக்கிய ட்வீட்டினால்... 
பிறந்த நாள் அன்று அனில் கும்ளேயை சங்கடப்படுத்திய பிசிசிஐ! 

பெங்களூரு: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேவின் பிறந்த நாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முதலில் வெளியிட்டு, பின்னர் நீக்கிய ட்வீட்டினால் சர்ச்சை எழுந்தது.   

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே. இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகள் புரிந்தவர். ஓய்வு பெற்ற பின்னர், ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார். இவரது தலைமையில் இந்திய அணி உள்ளூரில் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அதில் 10–ல் வெற்றியும், 2–ல் டிராவும் கண்டது. ஒன்றில் மட்டுமே தோற்றது. அத்துடன் டெஸ்டில் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் இந்தியா கைப்பற்றியது.

அணில் கும்ளேவுக்கு இன்று 47 வது பிறந்த  நாள். அதனை ஒட்டி அவருக்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்களும், அவரது ரசிகர்களும் அவரது ஆதரவாளர்களும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அப்பொழுது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சார்பில்  டிவிட்டரில் அனில் கும்ளேக்கு   வாழ்த்து தெரிவித்து ஒரு செய்தி பதிவிடப்பட்டது. அதில் முன்னாள் இந்திய பந்து வீச்சாளர் கும்ளேவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் முன்னாள் கேப்டன், பயிற்சியாளர் என பல்வேறு வித பொறுப்புகளில் இருந்தவருக்கு இப்படி ஒரு வாழ்த்தா என்று கிரிக்கெட் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். விராட் கோலியும் 'லெஜெண்ட்' என்று குறிப்பிட்டிருக்கலாம் என்று  பதிவிட்டிருந்தார்.

தனது தவறை உணர்ந்து சுதாரித்த பிசிசிஐ உடனடியாக பழைய ட்வீட்டினை நீக்கி விட்டு, கும்ளேவை "முன்னாள் கேப்டன்" மற்றும் "லெஜெண்ட்" என்று அழைத்து வாழ்த்தி புதிய செய்தியை பதிவிட்டது.

பிறந்தநாள் அன்று நடைபெற்ற இத்தகைய சம்பவங்கள் கும்ளே ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தின. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com