பயிற்சி ஆட்டம்: நியூஸிலாந்து வெற்றி

இந்தியாவின் பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பயிற்சி ஆட்டம்: நியூஸிலாந்து வெற்றி

இந்தியாவின் பிசிசிஐ தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் நியூஸிலாந்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பிசிசிஐ தலைவர் அணி 47.1 ஓவர்களில் 310 ரன்களுக்கு சுருண்டது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ராஸ் டெய்லர், டாம் லதாம் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் கடந்தனர். டெய்லர் 83 பந்துகளில் 14 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 102 ரன்கள் எடுத்தார். லதாம் 97 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 108 ரன்கள் அடித்தார்.
கப்டில் 32, மன்ரோ 26, நிகோல்ஸ் 24 ரன்களில் ஆட்டமிழக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். டிம் செüதி டக் அவுட் ஆனார். சேன்ட்னர் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். பிசிசிஐ தலைவர் அணி தரப்பில் உனத்கட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கரண் சர்மா 2, தவல் குல்கர்னி ஒரு விக்கெட் எடுத்தனர். பின்னர் ஆடிய பிசிசிஐ தலைவர் லெவன் அணியில் கருண் நாயர், குருகீரத் சிங் மட்டும் அரைசதம் கடந்தனர். இதில் 54 பந்துகளுக்கு 7 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்து கருண் நாயர் ஆட்டமிழந்தார். குருகீரத் சிங் 46 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார்.
உனத்கட் 44, ஷ்ரேயஸ் ஐயர் 24, குல்கர்னி 24, பிருத்வி ஷா 22, கரண் சர்மா 19, செüதரி 12 ரன்கள் எடுத்தனர். ரிஷப் பந்த், மிலிந்த் குமார் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, ஷாபாஸ் நதீம் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து தரப்பில் சேன்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டிம் செüதி 2 விக்கெட்டுகளும், டிரென்ட் போல்ட், ஐஸ் சோதி, ஹென்றி ஆகியோர் தலா ஒரு 
விக்கெட்டும் எடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com