ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்

10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், "சூப்பர் 4 ஸ்டேஜ்' சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

10-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், "சூப்பர் 4 ஸ்டேஜ்' சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
சூப்பர் 4 ஸ்டேஜ் சுற்றைப் பொருத்த வரையில், இதுவரை ஆடிய 2 ஆட்டங்களில் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா, மற்றொரு ஆட்டத்தை சமன் செய்துள்ளது. அதேவேளையில் ஒரு தோல்வியை பதிவு செய்துள்ள பாகிஸ்தான், ஒரு ஆட்டத்தை சமன் செய்துள்ளது.
இந்தப் போட்டியில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. சமீபத்திய ஆட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய அணி, அதே நம்பிக்கை மற்றும் உத்வேகத்துடன் களம் காண உள்ளது.
இந்தப் போட்டியின் அனைத்து ஆட்டங்களிலும் இந்தியா அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளதால், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்தாலே இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெறும். அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அதிக கோல்கள் வித்தியாசத்தில் வென்றாலும், தென் கொரியா-மலேசியா அணிகள் மோதும் மற்றொரு ஆட்டத்தின் முடிவே பாகிஸ்தானுக்கான இறுதிச் சுற்று வாய்ப்பை நிர்ணயிக்கும். இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமானது உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்கும் என்பதால், இந்திய அணி சற்று கவனமுடன் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தென் கொரியா-மலேசியா, நேரம்: மாலை 3 மணி
இந்தியா-பாகிஸ்தான், நேரம்: மாலை 5.30

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com