2-ஆவது டெஸ்ட்: வங்கதேசம்-253/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையே திங்கள்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், செளம்யா சர்கார் களம் கண்டனர். இதில் தமிம் இக்பால் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த இம்ருல் கயஸ் 4 ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் செளம்யா சர்கார் சற்று நிலைத்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக், செளம்யா சர்காருடன் இணைந்தார். இந்நிலையில், 81 பந்துகளுக்கு 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் எடுத்திருந்த செளம்யா சர்கார் ஆட்டமிழந்தார். அவரை எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் நாதன் லயன்.
மதிய உணவு இடைவேளையின்போது, 29.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம். பின்னர் தொடங்கிய ஆட்டத்தில், மொமினுலுடன் இணைந்தார் ஷகிப் அல் ஹசன். இருவரும் சற்று நிலைத்து ஆடி வருகையில், நாதன் லயன் பந்தை எதிர்கொண்ட மொமினுல், எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 67 பந்துகளை சந்தித்திருந்த அவர், 2 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்தார்.
அவரைத் தொடர்ந்து முஷ்ஃபிகர் ரஹீம் களத்துக்கு வர, 52 பந்துகளுக்கு 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் ஷகிப் அல் ஹசன். பின்னர் வந்த சபீர் ரஹ்மான், முஷ்ஃபிகருடன் இணைந்தார்.
இந்த ஜோடி விக்கெட் சரிவை தடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சபீர் ரஹ்மான் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் அரைசதம் எட்டினார். முஷ்ஃபிகர் ரஹீம் 124 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில், 113 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த சபீர் ரஹ்மான் ஆட்டமிழந்தார்.
இவ்வாறாக, முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வர, 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 62, நாசிர் ஹுசைன் 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய தரப்பில், நாதன் லயன் 5, ஆஷ்டோன் அகர் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com