2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் பெற்று வலுவான நிலையில் உள்ளது...
2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி  2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் பெற்று வலுவான நிலையில் உள்ளது. வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் எடுத்தது. 

இரு அணிகளுக்கு இடையே சிட்டகாங்கில் நேற்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டம் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்திருந்தது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 62, நாசிர் ஹுசைன் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 113.2 ஓவர்களில் 305 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம். முஷ்ஃபிகர் ரஹீம் 68, சபீர் ரஹ்மான் 66 ரன்கள் எடுத்தார்கள். ஆஸ்திரேலியத் தரப்பில், நாதன் லயன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

 இதன்பிறகு ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக விளையாடி வருகிறது. கேப்டன் ஸ்மித் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 88, ஹேண்ட்ஸ்காம்ப்  69 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 8 விக்கெட் மீதமுள்ள நிலையில் முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணி பின்தங்கியுள்ளது. தற்போது வலுவான நிலையில் உள்ளதால் குறைந்தபட்சம் 100 ரன்கள் முன்னிலை பெற்று வங்கதேச அணிக்கு அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com