ஒருநாள் ஆட்டம்: செப். 10 முதல் டிக்கெட் விற்பனை

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வரும் 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் தொடங்குகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை வரும் 10-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில் தொடங்குகிறது.
இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 17-ஆம் தேதி பகலிரவாக நடைபெறுகிறது.
அந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, ரூ.1200, ரூ.2400, ரூ.4800, ரூ.8000, ரூ.12000 ஆகிய விலைகளில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. இந்த டிக்கெட்டுகளை மைதானத்தின் கவுன்டர்களில் பெறலாம். அதுதவிர, ஆன்லைனில் "www.bookmyshow.com' என்ற இணையதளத்திலும் பெறலாம்.
இந்திய-ஆஸ்திரேலிய அணிகள், 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர், 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com