துளிகள்...

*ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 4-11,4-11,4-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் நூர் அல் தாயெப்பிடம் வீழ்ந்தார்.

*ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 4-11,4-11,4-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் நூர் அல் தாயெப்பிடம் வீழ்ந்தார்.
*புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் செளராஷ்டிர அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் சனிக்கிழமை வென்றது டிஎன்சிஏ மாவட்டங்கள் லெவன் அணி.
*ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் தில்லியில் அடுத்த ஆண்டு ஜூலை 19 முதல் 22-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
*மேற்கு ரயில்வேயில் தலைமை அலுவலக கண்காணிப்பாளராக இருந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனையான ஹர்மன்பிரீத் கெளர், சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
*வீரர்கள் அணியில் நீடிக்கும் வகையில் தங்களது திறனை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புவதாக, இந்திய ஹாக்கி அணியின் புதிய சிறப்புப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறினார்.
*பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்கு அளிக்க இருக்கும் பிரிவுபச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று ஒய்வு பெற்றுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com