ஓய்வு கோரியது ஏன்? ஷகிப் அல்ஹசன் விளக்கம்!

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அல்ஹசன், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாக தேர்வுக் குழுவினரிடம்...
ஓய்வு கோரியது ஏன்? ஷகிப் அல்ஹசன் விளக்கம்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள வங்கதேச அணியில் இருந்து உலகின் முன்னணி ஆல்ரவுண்டரான ஷகிப் அல்ஹசனுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வந்த அல்ஹசன், தனக்கு ஓய்வு தேவைப்படுவதாக தேர்வுக் குழுவினரிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறார்.

இது தொடர்பாக வங்கதேச தேர்வுக் குழு தலைவர் மின்ஹாஜுல் அபிதீன் கூறுகையில், "இப்போதும் ஷகிப் அல்ஹசன் இல்லாத வங்கதேச அணியை நினைத்துப் பார்க்க முடியாது. எனினும் அவர் ஓய்வு தேவை என வேண்டுகோள் விடுத்ததால், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.

இந்நிலையில் தனது முடிவு குறித்து ஷகிப் கூறியதாவது: 

சமீபகாலமாக ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். இந்த இடைக்கால ஓய்வு குறித்து என் நண்பர்கள், குடும்பத்தினரிடமும் விவாதித்தேன். பிறகுதான் இந்த முடிவை எடுத்தேன். தொடர்ந்து விளையாடுவதால் எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. நல்ல உடற்தகுதியை அடையவும் நல்ல மனநிலையில் இருப்பதற்காகவும் இந்த ஓய்வு கோரிக்கையை முன்வைத்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்கு இன்னிங்ஸ்களிலும் நான் பங்களிப்பைச் செலுத்தவேண்டியுள்ளது. அணியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவேண்டியுள்ளது. ஆட்ட ஊதியத்துக்காக கிரிக்கெட் விளையாடமுடியாது. மிகவும் ஆர்வத்துடன் விளையாடும்போதுதான் என்னால் சிறப்பாகப் பங்களிக்கமுடியும். 

என்னைப் போலவே மற்ற வீரர்களுக்கும் ஓய்வு தேவையெனில் அவர்கள் இதுகுறித்துப் பேசவேண்டும். அவர்களுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு இந்த இடைக்கால ஓய்வு உதவும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com