ஆஸ்திரேலிய அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்துக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணியுடன் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் இணைவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆரோன் ஃபிஞ்ச் கடந்த வியாழக்கிழமை சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருடைய காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. அவருடைய ஸ்கேன் அறிக்கையை ஆராய்ந்த மருத்துவர்கள், சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு விளையாடலாம் என தெரிவித்துள்ளனர். எனவே அவர் இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் விளையாடமாட்டார் என தெரிகிறது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முடநீக்கியல் நிபுணர் அலெக்ஸ் காவ்ன்டூரிஸ் கூறுகையில், "ஆரோன் ஃபிஞ்சுக்கு சென்னையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அவருடைய காயம் தீவிரமானதாக இல்லாவிட்டாலும், ஆரம்பக் கட்ட ஆட்டங்களில் அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com