ஐரோப்பிய ஹாக்கி தொடர்: இந்திய மகளிர் தோல்வி

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் லேடீஸ் டென் பாஸ்ச் அணியிடம் தோல்வி கண்டது.

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 1-3 என்ற கோல் கணக்கில் லேடீஸ் டென் பாஸ்ச் அணியிடம் தோல்வி கண்டது.
நெதர்லாந்தின் டென் பாஸ்ச்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டென் பாஸ்ச் அணியின் வான் டென் 12 மற்றும் 45-ஆவது நிமிடங்களில் கோலடித்தார். இதனால் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 47-ஆவது நிமிடத்தில் இந்திய பின்கள வீராங்கனை நவ்தீப் கெளர் கோலடிக்க, அதற்குப் பதிலடியாக 57-ஆவது நிமிடத்தில் டென் பாஸ்ச் அணியின் இம்கே ஹோயக் கோலடித்தார். இதனால் டென் பாஸ்ச் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் பெல்ஜியம் ஜூனியர் ஆடவர் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com