சூதாட்டப் புகாரில் பாகிஸ்தான் வீரருக்கு 5 ஆண்டு தடை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்புக்குச் சூதாட்டப் புகாரில் 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது...
சூதாட்டப் புகாரில் பாகிஸ்தான் வீரருக்கு 5 ஆண்டு தடை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லதீப்புக்குச் சூதாட்டப் புகாரில் 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய 31 வயது காலித் லதீப், சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கு முகவருடன் தொடர்பில் இருந்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து அவருக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 

சூதாட்டப் புகார்களை விசாரிக்க தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையில் காலித் லதீப் மீதான குற்றச்சாட்டு உறுதியானதால் கிரிக்கெட் விளையாட அவருக்கு 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022 வரை எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அவரால் கலந்துகொள்ள முடியாது. 

சிலவாரங்களுக்கு முன்பு காலித் லதீப்புடன் அதே அணியில் விளையாடிய பாகிஸ்தான் வீரர் சர்ஜீல் கானுக்குச் சூதாட்டப் புகாரில் 5 ஆண்டு காலம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த 30 மாதங்களுக்குச் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஜீல் கானால் விளையாடமுடியாது. பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 2019-க்குப் பிறகு சர்ஜீல் கானால் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கமுடியும்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளுக்காக ஏற்கெனவே முகமது இர்பான், முகமது நவாஸ் ஆகியோருக்கும் தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் சிறிய அளவிலான தண்டனைகள் என்பதால் அவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

காலித் லதீப் 5 ஒருநாள், 13 டி20 சர்வதேசப் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com