புரோ கபடி: ஹரியாணாவை வீழ்த்தியது புணே

புரோ கபடி லீக் போட்டியின் 84-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை 37-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி புணேரி பால்டான் அணி வெற்றி கண்டது.
புரோ கபடி: ஹரியாணாவை வீழ்த்தியது புணே

புரோ கபடி லீக் போட்டியின் 84-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை 37-25 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி புணேரி பால்டான் அணி வெற்றி கண்டது.
இரு அணிகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்துக்குள்ளாகவே தலா ஒரு ரைடு, டேக்கிள் புள்ளிகள் மூலம் 2-0 என புணே அணி முன்னிலை பெற்றது. ஹரியாணாவின் ரைடர் வாஸிர் சிங் 2-ஆவது நிமிடத்தில் அணிக்கான முதல் புள்ளியை பெற்றுத் தந்தார்.
முதல் 5 நிமிடத்துக்குப் பிறகு இரு அணிகளுமே விடாப்பிடியுடன் ஆட, 5-5 என்ற கணக்கில் புள்ளிகள் சமநிலை ஆனது. பின்னர் 9-ஆவது நிமிடத்தில் அருமையாக ரைடு சென்ற புணே அணியின் ராஜேஷ் மோந்தால், தனது புள்ளிகளால் 7-4 என்ற கணக்கில் அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆனால், அடுத்த நிமிடத்திலேயே ஹரியாணாவும் புள்ளிகளை அடுத்தடுத்து கைப்பற்ற ஆட்டம் மீண்டும் 7-7 என சமன் ஆனது.
ஆட்டத்தின் 17-ஆவது நிமிடத்தில் புணே வீரர் தீபக் ஹூடாவின் ரைடு புள்ளியால், 10-9 என முன்னிலை பெற்ற அந்த அணி, அடுத்த நிமிடத்திலேயே ஹரியாணாவை ஆல் அவுட செய்தது. இதனால் முதல் பாதியில் ஹரியாணா அணி 10-16 என்ற கணக்கில் பின்தங்கியது.
2-ஆவது பாதி ஆட்டத்தின் தொடக்கத்தில் 2 புள்ளிகளை வென்றது ஹரியாணா. எனினும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய புணே ஆட்டத்தின் 25-ஆவது நிமிடத்தில் 20-13 என முன்னிலை வகித்தது. பின்னர் தடுமாறியபடியே ஆடிய ஹரியாணாவை ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒருமுறை ஆல் அவுட் செய்தது புணே.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியாணாவின் சுர்ஜித் சிங் 3 ரைடு புள்ளிகளை கைப்பற்றினாலும், கடைசி நேரத்தில் அந்த அணியால் புள்ளிகள் வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது. இறுதியில் புணே அணி 37-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. புணே அணியில் அதன் ரைடர் ராஜேஷ், பின்கள வீரர் சந்தீப் நர்வால் தலா 7 புள்ளிகள் பெற்றனர். ஹரியாணா தரப்பில் ரைடர் சுர்ஜித் சிங் 10 புள்ளிகளைக் கைப்பற்ற, தடுப்பாட்டக்காரர் குல்தீப் சிங் 5 புள்ளிகள் வென்றார்.
இதையடுத்து, புள்ளிகள் பட்டியலில் 'ஏ' பிரிவில் 49 புள்ளிகளுடன் ஹரியாணா அணி 2-ஆவது இடத்திலும், 42 புள்ளிகளுடன் புணே அணி 3-ஆவது இடத்திலும் உள்ளன.
பாட்னா வெற்றி: இதனிடையே, மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை 36-32 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணி வீழ்த்தியது.
இன்றைய ஆட்டம்
யு மும்பா-குஜராத் 
ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ்
நேரம்: இரவு 8 மணி
பாட்னா பைரேட்ஸ்-
தமிழ் தலைவாஸ்
நேரம்: இரவு 9 மணி
இடம்: ராஞ்சி
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com