ஜப்பான் ஓபன்: சிந்துவுக்குப் பதிலடி கொடுத்தார் ஒகுஹரா!

சிந்து - ஒகுஹரா இடையேயான நீயா நானா போட்டியில் இந்தமுறை ஜப்பான் வீராங்கனை வெற்றி கண்டுள்ளார்... 
ஜப்பான் ஓபன்: சிந்துவுக்குப் பதிலடி கொடுத்தார் ஒகுஹரா!

சிந்து - ஒகுஹரா இடையேயான நீயா நானா போட்டியில் இந்தமுறை ஜப்பான் வீராங்கனை வெற்றி கண்டுள்ளார். 

தென் கொரிய தலைநகர் சியோலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் உலகின் 7-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார் சிந்து. இருவருக்கும் இடையே ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் விறு விறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 22-20, 11-21, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இதன்மூலம், கடந்த மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் ஒகுஹராவிடம் கண்ட தோல்விக்குப் பதிலடி கொடுத்தார் சிந்து. 

இவர்களிருவர் இடையேயான நீயா நானா போட்டி இன்றும் தொடர்ந்தது. இந்தமுறை ஒகுஹரா பதிலடி கொடுத்துள்ளார்.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் சிந்து - ஒகுஹரா மோதினார்கள். மிகவும் பரபரப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் ஒகுஹரா, 21-18, 21-8 என்ற நேர் செட்களில் சிந்துவைத் தோற்கடித்துக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். சொந்த நாட்டில் ரசிகர்கள் முன்னிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஒகுஹரா. இதனால் சிந்துவால் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தாலும் பிறகு ஒகுஹராவின் ஆக்ரோஷமான ஆட்டத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் போனது. இதனால் இரண்டாவது செட்டை மிக எளிதாக வென்று சிந்துவைத் தோற்கடித்தார் ஒகுஹரா.

இந்தமுறை ஜப்பான் வீராங்கனை வெற்றி பெற்றதால் அடுத்தப் போட்டியில் சிந்துவின் வெற்றியை எதிர்பார்க்கலாமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com