புரோ கபடி: ஹரியாணாவுக்கு 8-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 87-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 87-ஆவது ஆட்டத்தில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணி 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் இந்த சீசனில் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள ஹரியாணா அணி 'ஏ' பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் 12-12 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. 
ஆனால் பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 25-ஆவது நிமிடத்தில் இருந்து அபாரமாக ஆடிய ஹரியாணா அணி, இறுதியில் 30-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக வாஸிர் சிங் 10 புள்ளிகளைக் கைப்பற்றினார்.
யு.பி.யோதா வெற்றி: மற்றொரு ஆட்டத்தில் யு.பி.யோதா அணி 46-41 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. 
இன்றைய ஆட்டங்கள்
தபாங் டெல்லி- யு மும்பா
நேரம்: இரவு 8
பெங்களூரு புல்ஸ்-பெங்கால் வாரியர்ஸ்
நேரம்: இரவு 9 , இடம்: தில்லி
நேரடி ஒளிபரப்பு: 
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com