ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது சிறப்புமிக்கது

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது சிறப்புமிக்கதாகும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்தார்.
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது சிறப்புமிக்கது

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது சிறப்புமிக்கதாகும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்தார்.
கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மேத்யூ வேட், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவ், ஆட்டத்திலும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 
ஆட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: ஹாட்ரிக் சாதனை படைப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. எனினும் இப்போது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருப்பது சிறப்புமிக்கதாகும். எனது ஹாட்ரிக் சாதனையால் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இது எனக்கு பெருமை மிக்க தருணமாகும். ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்துவதற்காக பேட் கம்மின்ஸுக்கு பந்துவீசியபோது வழக்கத்துக்கு மாறாக பந்துவீசினேன். ஒருவேளை அந்த பந்து சுழன்றிருந்தால், நான் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்க முடியாது. 
இந்த ஆட்டத்தில் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால், ஆரம்பத்தில் பந்துவீசுவது கடினமாக இருந்தது. அதனால் ரன்களை கொடுக்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் எதிர்முனையில் இருந்து பந்துவீசியபோது என்னால் சிறப்பாக பந்துவீச முடிந்தது. அதனால் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டை வீழ்த்தி அந்த அணியை நெருக்கடிக்கு உள்ளாக்க முடிந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com