புரோ கபடி: பெங்கால் அணிக்கு 8-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியைத் தோற்கடித்தது.
இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்றுள்ள பெங்கால் வாரியர்ஸ் அணி, 58 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 2-ஆவது இடத்தில் உள்ளது.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் அபாரமாக ஆடியது பெங்கால் வாரியர்ஸ். தீபக் நர்வால் முதல் 4 நிமிடங்களில் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, பெங்கால் வாரியர்ஸ் அணி 5-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 
தொடர்ந்து அபாரமாக ஆடிய பெங்கால் வாரியர்ஸ், 8-ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியை ஆல் அவுட்டாக்கியதன் மூலம் 11-4 என வலுவான நிலையை எட்டியது. இதன்பிறகு முதல் பாதி ஆட்டநேர முடிவில் பெங்கால் அணி 18-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் சரிவிலிருந்து மீள்வதற்குப் போராடிய பெங்களூரு அணி 25-ஆவது நிமிடத்தில் 13-20 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. 26-ஆவது நிமிடத்தில் மணீந்தர் சிங் தனது ரைடின் மூலம் இரு புள்ளிகளை கைப்பற்ற, பெங்கால் அணி 22-14 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
தொடர்ந்து போராடிய பெங்களூரு அணி, ஹரிஷ் நாயக்கின் சிறப்பான ரைடின் மூலம் மோசமான நிலையில் இருந்து மீண்டது. 36-ஆவது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ûஸ ஆல் அவுட்டாக்கிய பெங்களூரு அணி, ஸ்கோரை சமன் செய்யும் (23-26) வாய்ப்பை நெருங்கியது. 38-ஆவது நிமிடத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்திலேயே பின்தங்கியிருந்தது பெங்களூரு அணி. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 39-ஆவது நிமிடத்தில் பெங்கால் வீரர் மணீந்தர் சிங் தனது சூப்பர் ரைடின் மூலம் ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் பெங்கால் அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது. 
பெங்கால் வீரர் மணீந்தர் சிங் 9 புள்ளிகளையும், சுர்ஜீத் சிங் 6 புள்ளிகளையும் கைப்பற்றினர். பெங்களூரு தரப்பில் ஹரிஷ் நாயக் 11 புள்ளிகளைக் கைப்பற்றினார். அந்த அணியின் முன்னணி ரைடர்களான ரோஹித், அஜய் குமார் ஆகியோரின் மோசமான ஆட்டமே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com