கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் தவன், ஜடேஜாவுக்கு இடமில்லை!

இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தவன், ஜடேஜா ஆகிய இருவரும்... 
கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் தவன், ஜடேஜாவுக்கு இடமில்லை!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறுகிறது.

இந்நிலையில் கடைசி இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் தவன், ஜடேஜா ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் 17-ம் தேதி தொடங்கியது. அதன் முதல் 3 ஆட்டங்களில் இருந்து ஷிகர் தவன் விலகினார். ஷிகர் தவனின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லை. அவரைப் பார்த்துக் கொள்வதற்காக முதல் 3 ஆட்டங்களில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து தவன் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். எனினும் ஷிகர் தவனுக்குப் பதிலாக மாற்று வீரரை பிசிசிஐ தேர்வு செய்யவில்லை.

3-வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு தவன் இந்திய அணியில் மீண்டும் இணைந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த ரஹானே சிறப்பாக விளையாடிவருவதால், கடைசி இரு ஒருநாள் போட்டிகளிலும் தவன் இடம்பெறவில்லை. இதையடுத்து ரோஹித் சர்மா - ரஹானே ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக மீதமுள்ள போட்டிகளில் தொடரவுள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் படேல் விலகினார். இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியதாக பிசிசிஐ தெரிவித்தது. அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான சஹாலும் குல்தீப் யாதவும் பிரமாதமாகப் பந்துவீசிவருவதாலும் அக்‌ஷர் படேல் காயத்திலிருந்து குணமாகிவிட்டதாலும் ஜடேஜா கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் சேர்க்கப்படவில்லை. இதையடுத்து அக்‌ஷர் படேல் மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com