செப்டம்பர் 28 முதல் அமலுக்கு வரும் புதிய கிரிக்கெட் விதிமுறைகள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய கிரிக்கெட் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டுவரவுள்ளது... 
செப்டம்பர் 28 முதல் அமலுக்கு வரும் புதிய கிரிக்கெட் விதிமுறைகள்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய கிரிக்கெட் விதிமுறைகளை அமலுக்குக் கொண்டுவரவுள்ளது. கீழே உள்ள முக்கிய விதிமுறைகள் செப்டம்பர் 28 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

* கிரிக்கெட் பேட்கள் குறிப்பிட்ட அளவுகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும். பேட்டின் நீள அகலத்தில் எவ்வித மாற்றங்கள் இல்லை. ஆனால் அதன் முனையின் தடிமன் 40 மில்லிமீட்டரைத் தாண்டக்கூடாது. அதேபோல பேட்டின் ஒட்டுமொத்த தடிமன் 67 மில்லிமீட்டரை விடவும் அதிகமாக இருக்கக்கூடாது. 
* ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை வெளியேற்ற நடுவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
* டி20 போட்டியில் டிஆர்எஸ் பயன்படவுள்ளது. 
* டிஆர்எஸ்-ஸில் நடுவர் முடிவினால் (umpire’s call) இனிமேல் ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழக்கத் தேவையில்லை. இதனால் டெஸ்ட் போட்டியில் 80 ஓவர்களுக்குப் பிறகு கூடுதலாக டிஆர்எஸ் வாய்ப்புகள் வழங்கப்படாது. டெஸ்ட் போட்டியில் இனிமேல் ஒரு இன்னிங்ஸுக்கு இரண்டு டிஆர்எஸ் வாய்ப்புகள் மட்டுமே வழங்கப்படும். 
* ரன் அவுட் சமயங்களில் பந்து ஸ்டம்பில் படும்போது பேட்ஸ்மேனின் பேட் கிரிஸுக்குள் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. அதாவது அதற்கு முன்பே அவர் கிரிஸைத் தொட்டுவிட்டால் அதன்பிறகு பந்து ஸ்டம்பில் படும்போது அவருடைய பேட் கிரிஸில் படாமல் இருந்தாலும் அவுட் கிடையாது. ஏனெனில் அவர் அதற்கு முன்பே கிரிஸுக்குள் வந்துவிட்டார் என்பதால் அவரை ஆட்டமிழக்கச் செய்யமுடியாது. 
* பவுண்டரிக்கு அருகே நின்று கேட்ச் பிடிக்க முயலும்போது, பந்தை முதலில் பிடிக்கும்போது ஃபீல்டரின் கால், பவுண்டரி எல்லைக்குள் இருக்கவேண்டும். அதற்கு வெளியே நின்று கேட்ச் பிடித்தால் பேட்ஸ்மேனுக்கு பவுண்டரி வழங்கப்படும். 
* விக்கெட் கீப்பர், ஃபீல்டர் ஆகியோரின் ஹெட்மெட்டில் பந்து பட்டு பிறகு கேட்ச் பிடித்தாலும் பேட்ஸ்மேன் அவுட் என்றே அறிவிக்கப்படுவார். அதேபோல பந்து ஹெல்மெட்டில் பட்டாலும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யமுடியும். 
தற்போது நடைபெற்றும் வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான தொடரில் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படமாட்டாது. செப்டம்பர் 28 முதல் தென் ஆப்பிரிக்கா - வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலிருந்து இந்தப் புதிய விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com