கடைசி இரு ஆட்டங்கள்: இந்திய அணியில் ஷிகர் தவன் இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறவில்லை. 
கடைசி இரு ஆட்டங்கள்: இந்திய அணியில் ஷிகர் தவன் இல்லை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியில் ஷிகர் தவன் இடம்பெறவில்லை. 
ஷிகர் தவனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவர் முதல் 3 ஆட்டங்களில் விளையாடவில்லை. இந்த நிலையில் கடைசி இரு ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் அவர் இடம்பெறவில்லை. அதேநேரத்தில் கணுக்கால் காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் பங்கேற்காத ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல், கடைசி 2 ஆட்டங்களில் விளையாடவுள்ள இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதையடுத்து அக்ஷர் படேலுக்கான மாற்று வீரராக இடம்பெற்றிருந்த ரவீந்திர ஜடேஜா நீக்கப்பட்டுள்ளார். 
5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றியுள்ளது. 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை பெங்களூரில் நடைபெறுகிறது.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, அக்ஷர் படேல். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com