டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் மானவ் தக்காருக்கு தங்கம்

ஸ்லோவேனியா ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தக்கார் தங்கம் வென்றுள்ளார்.

ஸ்லோவேனியா ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மானவ் தக்கார் தங்கம் வென்றுள்ளார்.
தக்கார் தனது இறுதி ஆட்டத்தில் 11-6, 11-3, 11-5, 11-6 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டகேரு காஷிவாவை தோற்கடித்தார். 
இந்தப் போட்டியின் இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்ற மானவ் தக்கார், அணி பிரிவில் வெள்ளி வென்றார். இதன்மூலம் இந்தப் போட்டியின் சிறந்த வீரராகவும் மானவ் தக்கார் தேர்வு செய்யப்பட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com