டெஸ்ட்: நியூஸிலாந்து வெற்றி பெற 382 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற 382 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது...
டெஸ்ட்: நியூஸிலாந்து வெற்றி பெற 382 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி பெற 382 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறும் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 96.5 ஓவர்களில் 307 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 101 ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் செளதி 6, டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து  93.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. வாட்லிங் 85, கிராண்ட்ஹோம் 72 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் 6, ஜேம்ஸ் ஆன்டர்சன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 29 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 66 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் சேர்த்தது. ஜோ ரூட் 30, டேவிட் மலான் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். முன்னதாக ஜேம்ஸ் வின்ஸ் 76, ஸ்டோன்மேன் 60, அலாஸ்டர் குக் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்து அணி 106.4 ஓவர்களுக்கு 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்து தனது 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ரூட் 54, மலான் 53 ரன்கள் எடுத்தார்கள். நியூஸிலாந்துத் தரப்பில் கிராண்ட்ஹோம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

2-வது டெஸ்டை வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணிக்கு 382 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த அணி 4-ம் நாள் முடிவில் 23 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. லதம் 25, ரவல் 17 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். அனைத்து விக்கெடுகளும் கைவசம் உள்ள நிலையில் நியூஸிலாந்து அணி 2-வது டெஸ்டில் வெற்றி பெற கடைசி நாளில் 340 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com