அஃப்ரிடி நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார்: கம்பீர் நறுக்

ஷாகித் அஃப்ரிடி நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார் என்று இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர் தக்க பதிலடி அளித்துள்ளார்.
அஃப்ரிடி நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார்: கம்பீர் நறுக்

ஷாகித் அஃப்ரிடி நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார் என்று இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர் தக்க பதிலடி அளித்துள்ளார்.

இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதியில் அபாயகரமான மற்றும் மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இங்கு அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். சுதந்திரத்துக்கும், சுய சிந்தனை எண்ணத்துக்கும் எதிராக அடக்குமுறை ஆட்சியின் கீழ் சவால் விடப்படுகிறது. இந்த அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறும் வேளையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் எங்கு இருக்கிறது என்று தெரியாதது ஆச்சரியமாக உள்ளது. இந்த கொடூர சம்பவத்தை தடுக்க அவர்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு இந்திய அணி வீரர் கௌதம் கம்பீர் தக்க பதிலடி அளித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:

ஷாகித் அஃப்ரிடி ட்வீட் குறித்து எனது கருத்தை தெரிவிக்குமாறு ஊடகத்தினர் கேட்டுக்கொண்டனர். அதில் தெரிவிக்க ஒன்றுமில்லை. அஃப்ரிடி குறிப்பிட்டுள்ள யூஎன் (UN) என்பது அவரது அகராதியில் 19 வயதுக்கு கீழ் (“UNDER NINTEEN”) என்று பொருள். அவர் நோபாலில் விக்கெட் வீழ்த்திவிட்டு கொண்டாடுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com