மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன்: பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார் சாய்னா

காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பாட்மின்டன் இறுதிச் சுற்றில் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார் சாய்னா நேவால்.
மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன்: பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார் சாய்னா

காமன்வெல்த் மகளிர் ஒற்றையர் பாட்மின்டன் இறுதிச் சுற்றில் பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார் சாய்னா நேவால்.
பாட்மிண்டன் ஆட்டங்களில் இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து செலுத்தி வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான சிந்து-சாய்னா நேவால் மோதினர். 
இரு வீராங்கனைகளும் மோதிய போட்டியில் அனல் பறந்தது. முதல் செட்டில் சாய்னா அபாரமாக ஆடி 11-6 என முன்னிலை பெற்றார். எனினும் சிந்து தொடர்ந்து போராடி முன்னிலையை குறைத்தாலும், அந்த செட்டை 21-18 என்ற கணக்கில் சாய்னா வென்றார். இரண்டாவது செட்டில் சிந்து தொடக்கத்தில் அபாரமாக ஆடி புள்ளிகளைக் குவித்தார். இடையில் 11-8 என்ற கணக்கில் சிந்து முன்னிலை வெற்றார். 
எனினும் சாய்னா சிறிதும் தளராமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடியும் வலுவான ஷாட்களாலும் சிந்துவை தடுமாறச் செய்தார். 18-19 என முன்னிலை சாய்னா குறைத்தார். அப்போது சிந்து சிறிது சோர்வுடன் காணப்பட்ட நிலையில் 21-20 என்ற கணக்கில் தனது முதல் வெற்றிப்புள்ளியை சாய்னா பதிவு செய்தார்.
இறுதியில் 23-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றிய சாய்னா தங்கப் பதக்கத்தை வென்றார். பி.வி.சிந்து வெள்ளி பதக்கத்தை வென்றார். 
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதும், காமன்வெல்த் தங்கத்தை வெல்வதையே இலக்காக கொண்டேன். இத்தங்கம் எனது தாய், தந்தைக்கும், நாட்டுக்கும் அர்ப்பணிக்கிறேன். கலப்பு அணிகள் பிரிவில் அனைத்து ஆட்டங்களிலும் பங்கேற்றதால் எனது கால்கள் தளர்ந்து விட்டன. சிந்துவுடனான மோதல் கடுமையாக இருந்தது. கடந்த 10 நாள்களாக தொடர்ந்து ஆடி வருகிறேன். சிந்து உயரமாக இருந்தது அவருக்கு சாதகமாக இருந்தது. எங்கள் இருவர் இடையிலான ஆட்டம் ஆரோக்கியமான போட்டியாகும் என்றார் சாய்னா.
ஸ்ரீ காந்துக்கு வெள்ளிப் பதக்கம்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல்நிலை வீரரான கே.ஸ்ரீகாந்த் 19-21, 21-14, 21-14 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ சொங் வெய்யிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். லீ சொங் காமன்வெல்த் பாட்மிண்டனில் பெறும் 3-வது தங்கமாகும். 
தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும், பல்வேறு தவறுகளை செய்ததால், லீ சொங் முதலிலேயே முன்னிலை பெற்றது சாதகமாகி விட்டது. அவர் என்னை விட சிறப்பாக ஆடினார் என்றார் ஸ்ரீகாந்த்.
இரட்டையர் பிரிவில் வெள்ளி: இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் இணை 13-21, 16-21 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் மார்கஸ் எலிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் இணையிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com