தெற்காசிய கால்பந்து போட்டி: மாலத்தீவு, இலங்கை பிரிவில் இந்தியா

வங்கதேசத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்து கோப்பை (சாஃப்) போட்டியில் மாலத்தீவு, இலங்கை நாடுகள் அடங்கிய பிரிவில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

வரும் செப்டம்பர் 4 முதல் 15-ம் தேதி வரை சாஃப் கோப்பை கால்பந்து போட்டி மூன்றாவது முறையாக வங்கதேசத்தில் நடக்கிறது. குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நேபாளம், பாகிஸ்தான், பூடான் நாடுகளும், குரூப் பி பிரிவில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 
7 முறை சாம்பியனான இந்தியா கடந்த 2015-இல் நடந்த இறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்று கோப்பையை கைப்பற்றியது. டாக்காவில் உள்ள நேஷனல் விளையாட்டரங்கில் அனைத்துப் போட்டிகளும் நடக்கின்றன. தற்போது 12-வது சாஃப் கால்பந்து கோப்பை போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com