20 ஓவர்கள் அல்ல, 100 பந்துகள்: இங்கிலாந்து அறிமுகப்படுத்தும் புதிய வகை கிரிக்கெட்!

ஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிமுகம் செய்யவுள்ளது... 
20 ஓவர்கள் அல்ல, 100 பந்துகள்: இங்கிலாந்து அறிமுகப்படுத்தும் புதிய வகை கிரிக்கெட்!

ஐபிஎல் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிமுகம் செய்யவுள்ளது. 

இந்த 100 பந்துகள் ஆட்டத்தில் வழக்கமான 6 பந்துகள் கொண்ட 15 ஓவர்களும் 10 பந்துகள் கொண்ட ஒரு ஓவரும் வீசப்படும். இதனால் டி20 போட்டிகளான ஐபிஎல், பிக் பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இது உள்ளது.

ஆடவர், மகளிர் என இரு தரப்பினருக்கும் நடத்தப்படும் இந்தப் போட்டியில் தலா 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன.  

1979-80 முதல் எல்லா வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 6 பந்துகள் கொண்ட ஓவர்கள்தான் வீசப்படுகின்றன. அதற்கு முன்பு நான்கு, ஐந்து, ஆறு, எட்டுப் பந்துகள் கொண்ட ஓவர்கள் வீசப்பட்டு வந்தன. டி20 போட்டிகளில் மொத்தமாக 240 பந்துகள் வீசப்படும். இதில் 40 பந்துகள் குறைவாக வீசப்படுவதால் ஆட்ட நேரம் மேலும் குறையவுள்ளது. கடந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஓவர்கள் கொண்ட போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸர்ஸ் போட்டியில் 5 ஓவர்கள் வீசப்படும். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் அறிமுகப்படுத்தும் இந்தப் போட்டி இதுவரையிலும் இல்லாத முற்றிலும் மாறுபட்ட போட்டியாக இருக்கப் போகிறது. 2020 முதல் தொடங்கவுள்ள இந்தப் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தப் போட்டியை அனுமதிக்கக் கோரி எம்சிசி நிர்வாகத்திடம் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம் விண்ணப்பம் அளித்துள்ளது.   

2003-ல் டிவெண்டி20 கப் என்கிற டி20 போட்டியை இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. அதன் அடுத்தக்கட்டமாக 100 பந்துகள் கொண்ட இப்போட்டி நடைபெறவுள்ளது. இதற்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் ஆகியோரிடமிருந்து பல்வேறு விதமான கருத்துகள் உருவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com