ஐபிஎல்:  64 ரன்கள் வித்தியாசத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவரில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 மட்டுமே  ரன்களை எடுத்து தோல்வியடந்தது.
ஐபிஎல்:  64 ரன்கள் வித்தியாசத்தில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் 17-வது ஆட்டம் புணேவில் இன்று நடைபெற்றது.
போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பந்து வீச்சினைத் தேர்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்களை எடுத்தது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்  சுரேஷ் ரெய்னா, கரண் சர்மாவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  தொடக்க வீரரான ஷேன் வாட்சன் 57 பந்துகளில்  6 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்களை குவித்தார்.
மேலும் அம்பத்தி ராயுடு 12, சுரேஷ் ரெய்னா 46 ,மகேந்திர சிங் தோனி 5, சாம் பில்லிங்ஸ் 3 ,  டுவைன் பிராவோ ஆட்டமிழக்காமல் 24 ரன்களும்,  ரவீந்திர ஜடேஜா 2  ரன்களையும் எடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.3 ஓவரில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை  மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
அணியின் தொடக்க வீரர் கேப்டன் அஜிங்க்ய ரஹானே 16 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து கிளாசன் 7, சஞ்சூ சாம்சன் 2  ரன்கள் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மேலும் பென் ஸ்டோக்ஸ் 45,  ஜோஸ் பட்லர் 22 , ராகுல் திரிபாதி 5 , ஸ்டூவர்ட் பின்னி 10, ஜெயதேவ் உனாட்கட் 16, ஷ்ரேயாஸ் கோபால் 8 ரன்கள் என 18.3 ஓவரில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
இதன் மூலம்  சென்னை சூப்பர் கிங்ஸ் 64 ரன்கள் வித்தியாசத்தில்  அபார வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com