கிரிக்கெட் உலகக் கோப்பை: ஜூன் 16 அன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பை: ஜூன் 16 அன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிரிட்டனில் அடுத்த ஆண்டு மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

2019-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 29 முதல் மே 19-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மே 30-ம் தேதி தொடங்கும் உலகக் கோப்பை போட்டியில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை ஜூன் 2-ஆம் தேதி எதிர்கொள்வதாக இருந்தது. எனினும், லோதா குழு பரிந்துரைகளின்படி ஐபிஎல் போட்டிக்கும், சர்வதேச போட்டிக்கும் இடையே 15 நாள்கள் இடைவெளி இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், இந்தியா விளையாடும் முதல் ஆட்டம் ஜூன் 5-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. முன்னதாக, இந்த ஆட்டம் ஜூன் 2-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஐசிசியின் முக்கியமான போட்டிகள் யாவும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்திலிருந்தே தொடங்கியிருந்தது. 2015 உலகக் கோப்பை போட்டியிலும், 2017 சாம்பியன்ஸ் டிராபியிலும் இதுவே நிகழ்ந்தது. எனினும், இம்முறை இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்துடன் போட்டி தொடங்கவில்லை. அதற்குப் பதிலாக ஜூன் 16, ஞாயிறு அன்று இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறவுள்ளது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்துக்கு அதிக வரவேற்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. 

மே 30 அன்று தொடங்கவுள்ள உலகக் கோப்பைப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. 1992 உலகக் கோப்பை போட்டி போல இதிலும் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் குறைந்தபட்சம் ஒருமுறையாவது மோதவேண்டும். இதனால் இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நாடும் 9 லீக் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.   

இந்தப் போட்டியின் இறுதிச்சுற்று ஜூலை 14 அன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com