இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பொதுவான எதிர்பார்ப்பு: ஐசிசி முதன்மை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன்

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதில் சிக்கல் உள்ளது. 
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் பொதுவான எதிர்பார்ப்பு: ஐசிசி முதன்மை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) முதன்மை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது:

வருகிற ஜுலை 1-ஆம் தேதி முதல் மகளிர் அணிகள் பங்கேற்கும் அனைத்து டி20 போட்டிகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படும். அதுபோல 2019-ஆம் வருடம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் இதே நிலை ஆடவர் கிரிக்கெட்டுக்கும் ஏற்படுத்தப்படும். 

ஐசிசி விதிகளில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. களத்தில் வீரர்களின் செயல்கள் ஏற்புடையதாக இல்லாதபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த புது விதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் தற்போதுள்ள அபராதங்களால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே புதிய சட்டதிட்டங்களை கிரிக்கெட் கமிட்டி ஏற்படுத்த வேண்டும். இந்த கமிட்டியில் ஆலன் பார்டர், ஷான் பொல்லாக் போன்றவர்களை உறுப்பினர்களாக நியமிக்கும் திட்டம் உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகள் அமைப்பது தொடர்பாக எந்த திட்டங்களும் ஏற்படுத்தப்படுவதில்லை. இதில் யாருடன் எந்த அணி பங்கேற்க வேண்டும் என்பது போன்ற ஒப்பந்தங்கள் ஏற்படுத்தும் நிலையில் இல்லை. இந்த தொடர்களில் அமையும் போட்டிகள் அனைத்தும் நல்லமுறையில் ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைப்பது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் கோரிக்கை வைக்க முடியும். ஆனால், இதற்கு இரு வாரியங்கள் மட்டுமே இதுவரை ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால் இதில் சிக்கல் உள்ளது. இந்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் மட்டுமே ஒப்புக்கொண்டால் போதுமானதாக இருக்காது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com