2021 சாம்பியன்ஸ் கோப்பை உலக டி-20 போட்டியாக மாற்றம்: ஐசிசி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள 2021 சாம்பியன்ஸ் கோப்பை உலக டி-20 போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என
2021 சாம்பியன்ஸ் கோப்பை உலக டி-20 போட்டியாக மாற்றம்: ஐசிசி அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறவுள்ள 2021 சாம்பியன்ஸ் கோப்பை உலக டி-20 போட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இதன் மூலம் 8 நாடுகள் பங்கேற்று வந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 கொல்கத்தாவில் ஐசிசி வாரியக் கூட்டம் 5 நாள்களாக நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை நிர்வாகி டேவ் ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் 16 நாடுகள் பங்கேற்கும் உலக டி-20 போட்டிகளாக மாற்றப்படுகின்றன. இதற்கு உறுப்பு நாடுகள் அனைத்தும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. முதலில் பிசிசிஐ இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பின்னர் ஆதரித்து வாக்களித்தது.
 இதன் மூலம் 2 டி-20 உலகக் கோப்பை போட்டிகள் இரு ஆண்டுகளில் நடைபெறவுள்ளன. 2020-இல் ஆஸ்திரேலியாவிலும், 2021-இல் இந்தியாவிலும் போட்டிகள் நடக்கின்றன. மேலும் 2019, 2023-இல் உலக கோப்பை ஒருநாள்போட்டிகள் நடத்தப்படும். இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள் முடிவுக்கு வருகின்றன.
 டெஸ்ட் போட்டிகளுக்கு ஐசிசி முக்கியத்துவம் தருவதாக கூறும் நிலையில் டி-20 போட்டிகளுக்கு தற்போது அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்ற புகார் தொடர்பாக ரிச்சர்ட்சன் கூறுகையில் உலக கோப்பை போட்டிகளை போன்றே சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளும் உள்ளன.
 வருங்காலத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை டி-20, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை, மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டி லீக் போன்றவை நடைபெறும்.
 லாஸ் ஏஞ்சலீஸில் 2028-இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. 104 உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச டி-20 அந்தஸ்து தரப்பட்டுள்ளது இதன் ஒரு பகுதியாகும். 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க காலக்கெடு முடிந்து விட்டது. எனவே 2028 போட்டிகளுக்கு விண்ணப்பித்துள்ளோம். இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடம் பேசி வருகிறோம் என்றார் ரிச்சர்ட்சன்.
 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச அளவில் டி-20 விளையாட்டு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இதன் மூலம் அர்ஜென்டினா-பப்புவா நியுகினியா நாடுகள் மோதும் போட்டிக்கும் சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ளது. ஆடவர், மகளிர் தரவரிசை அக்டோபர் 2018 மற்றும் மே 2019 முதல் அறிமுகம் செய்யப்படும்.
 அடுத்த ஐசிசி தலைவர் தேர்தலை ஜூன் மாதம் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு முடிவுகள் வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com