மகளிர் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளர்: பிசிசிஐ முடிவு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
 அணியின் வீராங்கனைகளுக்கு தலைமைப் பயிற்சியாளர் துஷார் அரோத் பேட்டிங் தொழில்நுட்பம் நிபுணத்துவம் குறித்து பயிற்சி அளித்து வருகிறார். பிஜு ஜார்ஜ் பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். எனினும் பெளலிங் பயிற்சியாளர் தேவை என அணி நிர்வாகம் பிசிசிஐக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 இதையடுத்து மகளிர் அணிக்கு புதிய பெளலிங் பயிற்சியாளரை நியமிப்பதற்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது. ஆசியக் கோப்பைக்கான மகளிர் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com