லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் இல்லை

இந்தியாவுடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்-ரௌண்டர் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை.
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் இல்லை

இந்தியாவுடனான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல்-ரௌண்டர் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை.

இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொரில் இந்திய அணி விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 9-ஆம் தேதி தொடங்குகிறது. 

இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், நடுகள பேட்ஸ்மேனான டேவிட் மலான் மற்றும் ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

முதல் டெஸ்டின் 2 இன்னிங்ஸையும் சேர்த்தே மலான் வெறும் 28 ரன்கள் தான் எடுத்தார். அதுமட்டுமின்றி விராட் கோலியின் கேட்ச் உட்பட 3 முக்கியமான கேட்ச்களை அவர் தவறவிட்டார். இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஓலி போப் எனும் இளம் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஓலி போப் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் 85.50 சராசரியுடன் 3 சதங்கள் உட்பட 684 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளார். அதனால், அவர் இந்தியாவுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

அந்த அணியின் மிக முக்கியமான ஆல்-ரௌண்டர் பென் ஸ்டோக்ஸ் பிரிஸ்டோல் வழக்கு தொடர்பாக வரும் வாரம் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார். அதனால், அவரால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  அவருக்கு பதிலாக காயத்தில் இருந்து மீண்ட கிறிஸ் வோக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் வீழ்த்திய 4 விக்கெட்டுகள் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்காக அமைந்தது. இந்நிலையில், அவரை அந்த அணி இழப்பது நிச்சயம் மிகப் பெரிய பின்னடைவாக அமையலாம்.  

அதேசமயம், கிறிஸ் வோக்ஸூம் ஆல்-ரௌண்டர் என்பதால் ஸ்டோக்ஸ் இடத்தை அவர் பூர்த்தி செய்வார் என்று இங்கிலாந்து அணியின் தேர்வுக் குழு எதிர்பார்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com