2014 லார்ட்ஸுக்குப் பிறகு இந்திய அணியில் நிகழும் தொடர் மாற்றங்கள்!

2014 லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு இன்றைய லார்ட்ஸ் டெஸ்ட் வரை தொடர்ந்து 44-வது டெஸ்டுகளாக இந்திய அணியில்...
2014 லார்ட்ஸுக்குப் பிறகு இந்திய அணியில் நிகழும் தொடர் மாற்றங்கள்!

2014-ல் லார்ட்ஸ் டெஸ்டை இந்திய அணி வென்றது. அப்போது முதல் டெஸ்ட் நடைபெற்ற டிரெண்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற அதே அணியே லார்ட்ஸ் டெஸ்டிலும் இடம்பெற்றது.

ஆனால் அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்தது. இஷாந்த் சர்மா, பின்னிக்குப் பதிலாக பங்கஜ் சிங், ரோஹித் சர்மா அணியில் இடம்பெற்றார்கள். அன்று ஆரம்பித்த அணி மாற்றம் இன்று வரை தொடர்கிறது.

இன்று தொடங்கியுள்ள லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஷிகர் தவன், உமேஷ் யாதவுக்குப் பதிலாக புஜாரா, குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2014 லார்ட்ஸ் டெஸ்டுக்குப் பிறகு இன்றைய லார்ட்ஸ் டெஸ்ட் வரை தொடர்ந்து 44-வது டெஸ்டுகளாக இந்திய அணியில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதிலும் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய அனைத்து டெஸ்டுகளிலும் குறைந்தது ஒரு மாற்றமாவது நிகழ்ந்துள்ளது. இது கோலி தலைமையேற்றுள்ள 37-வது டெஸ்ட். அவர் தலைமையில் இரு டெஸ்டுகளில் ஒரே அணி இதுவரை விளையாடியதில்லை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com