இந்தியா-இங்கிலாந்து 2-ஆவது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு

தொடர் மழையால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்தியா-இங்கிலாந்து 2-ஆவது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு


தொடர் மழையால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் நடந்து வரும் டி 20, ஒரு நாள் போட்டி, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று இந்திய அணி விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இதன் தொடர்ச்சியாக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த வாரம் பர்மிங்ஹாமில் தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி 31ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. கேப்டன் விராட் கோலி அபாரமாக ஆடியும் இந்திய அணி தோல்வியடைய நேரிட்டது.
இதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமை லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இங்கிலாந்து அணியில் , டேவிட் மலானுக்கு பதிலாக சர்ரே அணி வீரர் ஆலி பிலிப்பும் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் நீதிமன்றவிசாரணைக்காக சென்றுள்ள ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் சேர்க்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் இந்திய அணியில் புஜாரா, குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவர் என கருதப்பட்டிருந்த நிலையில் இரு அணிகளும் தங்கள் வீரர்கள் பட்டியலை வெளியிடவில்லை. . 11 மணிக்கு ஆட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடர் மழையால் ஆட்டம் தொடங்கவில்லை. 
இதனால் டாஸ் போடுவதும் நிறுத்தப்பட்டது. தொடர் மழை பெய்ததால் 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி 3.30 மணிக்கு மழை லேசாக நின்றது. அப்போது நடுவர்கள் மைதானத்தின் தன்மையை சோதனை செய்தனர். எனினும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மேலும் தேநீர் இடைவேளையின் போது தலைமை ஆடுகள நிபுணர் மிக் ஹண்டிடம் நடுவர்கள் ஆலோசனை செய்தனர்.
எனினும் மைதானத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால் ஆட்டம் தொடங்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com