லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு நெருக்கடியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்!

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அதிக ரன்கள் எடுத்துவிடாதபடி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து...
லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்துக்கு நெருக்கடியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்!

லார்ட்ஸில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 35.2 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விக்கெட்டுகள் சொற்ப ரன்களுக்கு மளமளவென வீழ்ந்த நிலையில் அஸ்வின் மட்டும் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 20 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இன்று இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் தொடர்ந்தது. முதல் டெஸ்டில் சொதப்பிய குக், நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கினார். ஜென்னிங்ஸ் 11 ரன்களில் ஷமி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் 21 ரன்களில் குக் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. இதன்பிறகு கேப்டன் ரூட்டும் அறிமுக வீரர் போப்பும் இந்தியப் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். எனினும் பாண்டியாவின் பந்துவீச்சில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார் போப். 25-வது ஓவரில் கேப்டன் குக்கை அற்புதமான பந்துவீச்சினால் வெளியேற்றினார் ஷமி. 

இதனால் 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 24.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 18 ரன்களே பின்தங்கியுள்ள நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.  எனினும் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அதிக ரன்கள் எடுத்துவிடாதபடி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடியளித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com