தாமதமாகச் சுதந்திர தின வாழ்த்து கூறியது ஏன்?: குறை சொன்ன ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்!

சுதந்திர தினம் முடிவடைந்துவிட்டது. ஒரு பிரபலம் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்றார்...
தாமதமாகச் சுதந்திர தின வாழ்த்து கூறியது ஏன்?: குறை சொன்ன ரசிகருக்குப் பதில் அளித்த மிதாலி ராஜ்!

கிட்டத்தட்ட நாளே முடிந்துவிட்டது. அப்போது, அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ். 

இதை ஒரு ரசிகர் சுட்டிக்காட்டினார். சுதந்திர தினம் முடிவடைந்துவிட்டது. ஒரு பிரபலம் இப்படி நடந்துகொள்ளக்கூடாது என்றார்.

வழக்கமாக இதுபோன்ற எதிர்வினைகளை பிரபலங்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். ஆனால் மிதாலி ராஜ், எதனால் தாமதமாக வாழ்த்துக் கூற நேர்ந்தது என்று விவரித்தார். அவர் கூறியதாவது:

என்னை ஒரு பிரபலமாக எண்ணியதற்குப் பெருமை கொள்கிறேன். நான், 1999 முதல் இந்திய அணி சார்பாகப் பங்குபெறும் ஒரு விளையாட்டு வீராங்கனை மட்டுமே. தற்போது சேலஞ்சர் கோப்பைக்கான ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஆட்டம் நடைபெறும் சமயங்களில் என்னிடம் செல்போன் இருக்காது. எதனால் வாழ்த்து கூற தாமதமானது என்பதைத் தற்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். சுதந்திர தின வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com