டெஸ்ட்: இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்!

முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது...
டெஸ்ட்: இந்திய அணி மீண்டும் தடுமாற்றம்!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று தொடங்கியுள்ள நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ரூட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முரளி விஜய், தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவுக்குப் பதிலாக ஷிகர் தவன், ரிஷப் பந்த், பூம்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய ஷிகர் தவனும் ராகுலும் பொறுப்புடன் விளையாடினார்கள். இதனால் அவர்களால் சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாட முடிந்தது. 18 ஓவர்கள் வரை விளையாடி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் அச்சுறுத்தலைச் சமாளித்தார்கள். எனினும் 19-வது ஓவரில் 35 ரன்களில் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் தவன். பிறகு 23 ரன்களில் ராகுலின் விக்கெட்டையும் வீழ்த்தினார் வோக்ஸ். இதன்பிறகு வழக்கம்போல நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா, உணவு இடைவேளைக்கு முன்பு வோக்ஸ் பந்துவீச்சில் 14 ரன்களில் வெளியேறினார். 

இந்திய  அணி, முதல் நாள் உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. கோலி, 4 ரன்களுடன் களத்தில் உள்ளார். வடேகரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com