அரசியலிலும் ஜெயித்துக் காட்டும் கிரிக்கெட் வீரர்கள்!

கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஜெயித்த, முக்கியப் பதவி வகிக்கும் கிரிக்கெட் விரர்களின் பட்டியலில் இம்ரான் கான் இணைந்துள்ளார்...
அரசியலிலும் ஜெயித்துக் காட்டும் கிரிக்கெட் வீரர்கள்!

பாகிஸ்தானின் 22-வது பிரதமராகப் பொறுப்பேற்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்.

முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் இம்ரானின் பிடிஐ கட்சி 116 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) தலைவருமான இம்ரான் கானை (65) அந்த நாட்டு நாடாளுமன்றம் நேற்று தேர்ந்தெடுத்தது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) (பிஎம்எல்-என்) கட்சியின் தலைவர் ஷாபாஸ் ஷெரீஃபை விட 80 வாக்குகள் அதிகம் பெற்று அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இம்ரானின் அழைப்பின் பேரில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் சென்று பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். 

இதையடுத்து கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் அரசியலிலும் ஜெயித்த, முக்கியப் பதவி வகிக்கும் கிரிக்கெட் விரர்களின் பட்டியலில் இம்ரான் கான் இணைந்துள்ளார்.

அரசியலில் தற்போது முக்கியப் பதவிகளை வகிக்கும் கிரிக்கெட் வீரர்கள்

இம்ரான் கான் (பாகிஸ்தான்) - பாகிஸ்தான் பிரதமர்
அர்ஜூனா ரனதுங்கா (இலங்கை) - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
சனத் ஜெயசூர்யா (இலங்கை) - இணை அமைச்சர் 
நவ்ஜோத் சிங் சித்து (இந்தியா) - சுற்றுலாத் துறை அமைச்சர், பஞ்சாப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com