ஆசியப் போட்டி இன்று துவக்கம்

ஜகார்த்தாவில் 18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 45
ஆசியப் போட்டி இன்று துவக்கம்

ஜகார்த்தாவில் 18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகின்றன.
வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் 58 விளையாட்டுகளில் பதக்கங்களை கைப்பற்ற உள்ளனர்.
வரலாற்றில் முதன்முறையாக ஜகார்த்தா, பாலேம்பங் என இரு நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. தொடக்க, நிறைவு விழாக்கள் ஜகார்த்தா ஜெலரோ பங் கர்னோ மைதானத்தில் நடக்கின்றன. இந்தோனேஷிய கலைஞர்கள் அன்குன், ரைஸா, டுலுஸ், புத்ரி அயு, படின், காம்சியன், வியாவல்லன் ஆகியோர் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. சோனி டென் 1, 2, சோனி இஎஸ்பிஎன் டிவிகளில் தொடக்க விழாவை காணலாம்.
19-ஆம் தேதி போட்டிகள்: துவக்க நாளான 19-ஆம் தேதி இந்திய மகளிர் ஹாக்கி அணி இரவு 7 மணிக்கு இந்தோனேஷிய அணியுடன் மோதுகிறது.
காலை 8 மணிக்கு துப்பாக்கி சுடுதலில் 10 மீ ஏர் ரைபிள் கலப்பு அணி தேர்வுச் சுற்றில் ரவிக்குமார், அபூர்விசந்தேலா, 10 மணிக்கு ஏர் பிஸ்டல் பிரிவில் அபிஷேக் வர்மா, மனு பேக்கரும், 12 மணிக்கு 10 மீ ஏர் ரைபிள், மாலை 3.20 மணிக்கு 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றும் நடக்கிறது.
மல்யுத்தத்தில் ஆடவர் ப்ரீஸ்டைல் தகுதிச் சுற்றில் சந்தீப் டோமர் (57 கிலோ), பஜ்ரங் புனியா (65 கிலோ), சுஷில்குமார் (74கிலோ), பவன்குமார் (86 கிலோ), மெளஸம் கத்ரி (97 கிலோ) மோதுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com