ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சந்தேலா-ரவிக்குமாருக்கு வெண்கலம்

ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலத்தை துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சந்தேலா-ரவிக்குமார் இணை வென்றது.
ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சந்தேலா-ரவிக்குமாருக்கு வெண்கலம்

ஆசியப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெண்கலத்தை துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சந்தேலா-ரவிக்குமார் இணை வென்றது.
18-ஆவது ஆசியப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின. பல்வேறு விளையாட்டுகளில் முதல் சுற்று ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.
பாலேம்பங்கில் துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கலப்பு அணி ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா-ரவிக்குமார் இணை 42 ஷாட்களில் 429.9 சராசரி எடுத்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இப்பிரிவில் சீனாவுக்கு தங்கமும், சீன தைபேவுக்கு வெள்ளியும் கிடைத்தது.
ஆசியப் போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும். மேலும் அபூர்வி சந்தேலாவுக்கும் இது முதல் ஆசியப் போட்டி பதக்கமாகும். 
10 மீ ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வெல்லும் முனைப்பில் அபூர்வி உள்ளார். உலகக் கோப்பையில் இந்த இணை 4-ஆம் இடத்தைப் பெற்றது. 
நாங்கள் பயிற்சி பெற போதிய நேரம் கிட்டவில்லை. வெண்கலம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார் அபூர்வி.


மனு பேக்கர்-அபிஷேக் இணை தோல்வி

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்திய இளம் இணையான மனு பேக்கர்-அபிஷேக் வர்மா பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இறுதிக்கு தகுதி பெறவில்லை. கஜகஸ்தானுடன் 759 புள்ளிகள் சமனில் முடிந்த நிலையில் கூடுதல் ஷாட்கள் அடிப்படையில் கஜகஸ்தான் 5-ஆம் இடம் பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
மனு பேக்கர் அவரது திறமைக்கு ஏற்றார் போல் செயல்படவில்லை. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com