மல்யுத்தம்: தங்க மங்கை வினேஷ் போகட்

ஆசியப் போட்டி மல்யுத்தம் மகளிர் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
வினேஷ் போகட்டின் கிடுக்கிப் பிடியில் ஜப்பான் வீராங்கனை யுகி ஐரி.
வினேஷ் போகட்டின் கிடுக்கிப் பிடியில் ஜப்பான் வீராங்கனை யுகி ஐரி.


ஆசியப் போட்டி மல்யுத்தம் மகளிர் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
மல்யுத்தத்தில் ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்று தந்தார். இந்நிலையில் மகளிர் பிரிவிலும் வினேக் போகட், சாக்ஷி மாலிக், பூஜா தண்டா போன்றவர்கள் பங்கேற்ற ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
மகளிர் 50 கிலோ பிரிவில் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 8-2 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் சன் யனானை வீழ்த்தினார். காலிறுதியில் தென்கொரியாவின் கீம் யுங்ஜூவை 11-0 என்ற புள்ளிக் கணக்கில் வெறும் 100 வினாடிகளில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் வினேஷ் உஸ்பெகிஸ்தானின் யக்ஷிமுரடோவோவை 10-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார். இறுதிச் சுற்றில் அவர் ஜப்பானின் யூரி ஐரியை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கம் வென்றார். 
ஆசியப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் வினேஷ் போகட் பெற்றார்.
57 கிலோ பிரிவில் பூஜா தண்டா 64 வினாடிகளில் தாய்லாந்தின் ஓரஸா சுக்டோங்யோரை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் உஸ்பெகிஸ்தானின் நபீரா எùஸன்பெவாவை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஜப்பானின் சகாகமி 6-1 என்ற புள்ளிக்கணக்கில் பூஜாவை வென்றார். 62 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் 10-0 என்ற புள்ளிக்கணக்கில் தாய்லாந்தின் சாலினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். அதில் கிர்கிஸ்தானின் அஸுலு பெகோவாவிடம் 7-8 என்ற புள்ளிக்கணக்கில் போராடி தோற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com