6000 டெஸ்ட் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை!

அதிகவேகமாக 6000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் 29 வயது கோலி...
6000 டெஸ்ட் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை!

இந்திய கேப்டன் விராட் கோலி 6000 டெஸ்ட் ரன்களை எட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில், இன்று 6 ரன்களைக் கடந்தபோது இந்த உயரத்தை எட்டினார் கோலி. தன்னுடைய 70-வது டெஸ்டில் 119 இன்னிங்ஸில், அதிகவேகமாக 6000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார் 29 வயது கோலி.

ஒவ்வொரு 1000 ரன்னுக்கும் தேவைப்பட்ட இன்னிங்ஸ்

முதல் 1000 ரன்கள்: 27 இன்னிங்ஸ்
1000 - 2000 ரன்கள்: 26 இன்னிங்ஸ் 
2000 - 3000 ரன்கள்: 20 இன்னிங்ஸ் 
3000 - 4000 ரன்கள்: 16 இன்னிங்ஸ் 
4000 - 5000 ரன்கள்: 16 இன்னிங்ஸ்
5000 - 6000 ரன்கள்: 14 இன்னிங்ஸ்

6000 டெஸ்ட் ரன்களை விரைவாக எட்டிய இந்திய வீரர்கள் 

117 கவாஸ்கர்
119 கோலி 
120 டெண்டுல்கர்
123 சேவாக்
125 டிராவிட்

6000 ரன்களைக் கடந்த 10 இந்திய வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
சுனில் கவாஸ்கர்
லக்‌ஷ்மண்
சேவாக்
கங்குலி
வெங்க்சர்கார்
அசாருதீன்
குண்டப்பா விஸ்வநாத்
விராட் கோலி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com