சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் சுற்றுக்கு லிவர்பூல், பிஎஸ்ஜி உள்ளிட்ட அணிகள் தகுதி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றுக்கு பிஎஸ்ஜி, லிவர்பூல், பிஎஸ்ஜி, டாட்டன்ஹாம் உள்பட பல்வேறு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
கோலடித்த மகிழ்ச்சியில் நட்சத்திர வீரர்கள் நெய்மர்-மாப்பே.
கோலடித்த மகிழ்ச்சியில் நட்சத்திர வீரர்கள் நெய்மர்-மாப்பே.


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி நாக் அவுட் சுற்றுக்கு பிஎஸ்ஜி, லிவர்பூல், பிஎஸ்ஜி, டாட்டன்ஹாம் உள்பட பல்வேறு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு யுஇஎஃப்ஏ சார்பில் முதல்நிலை கிளப்புகளுக்கு சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் பிரபலமான கிளப்புகள் இடையிலான இரண்டாம் சுற்று ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றன.
அன்பீல்டில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்தின் லிவர்பூல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியின் நேபோலி அணியை வீழ்த்தியது. நட்சத்திர வீரர் முகமது சலா அற்புதமாக வெற்றி கோலை அடித்தார்.
பார்சிலோனாவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் லா லிகா சாம்பியன் பார்சிலோனாவை 1-1 என டிரா செய்தது டாட்டன்ஹாம் அணி. பார்சிலோனா தரப்பில் உஸ்மான் டெம்பிளே அற்புதமாக முதல் கோலை அடித்தார். எனினும் டாட்டன்ஹாம் அணி வீரர் லுகாஸ் மெளரா பதில் கோலடித்து சமன் செய்தார். இதன் மூலம் டாட்டன்ஹாம் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
பெல்கிரேடில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் லீக் சாம்பியன் பிஎஸ்ஜி 4-1 என்ற கோல் கணக்கில் ரெட் ஸ்டார் பெல்கிரேடை நொறுக்கியது. எடிசன் கேவனி, நெய்மர், மாப்பே, மார்குயின்ஹோஸ் ஆகியோர் பிஎஸ்ஜிக்கு கோலடித்தனர். ரெட் ஸ்டார் தரப்பில் கோபல்ஜிக் கோலடித்தார். பிஎஸ்ஜி அணியும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
மொனாக்கோவில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் போருஷ்யா டார்ட்மண்ட் அணி 2-0 என்ற கோல்கணக்கில் மொனாக்கோ அணியை வென்று நாக் அவுட் சுற்றில் இடம்பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com