ரேஸ் குதிரைகளைப் போல் இந்திய பெளலர்களை பாதுகாக்க வேண்டும்: பயிற்சியாளர் பரத் அருண்

ரேஸ் குதிரைகளைப் போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும் என பெளலிங் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.
ரேஸ் குதிரைகளைப் போல் இந்திய பெளலர்களை பாதுகாக்க வேண்டும்: பயிற்சியாளர் பரத் அருண்


ரேஸ் குதிரைகளைப் போல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை பாதுகாக்க வேண்டும் என பெளலிங் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார்.
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வென்றது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த், சமி, உள்ளிட்டோர் முக்கிய பங்கு வகித்தனர். இந்நிலையில் 16-ஆம் தேதி பெர்த்தில் இரண்டாவது டெஸ்ட் தொடங்குகிறது. 
பெர்த் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். இந்நிலையில் பயிற்சியாளர் பரத் அருண் புதன்கிழமை கூறியதாவது:
சிறப்பாக பந்து வீசி வரும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களை ரேஸ் குதிரைகளைப் போல் காக்க வேண்டும். சிறந்த வேகப்பந்து வீச்சு அலகாக இது உள்ளது.
அனைத்து அயல்நாட்டு சுற்றுப்பயணங்களிலும் அபாரமாக பந்துவீசி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட்களில் 60 விக்கெட்டுகள், இங்கிலாந்தில் 5 டெஸ்ட்களில் 82 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது அடிலெய்ட் டெஸ்டிலும் மெதுவான ஆடுகளத்தில் 20 விக்கெட்டுகளை சாய்த்துள்ளனர்.
பும்ரா, சமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தி நிலையான பெளலிங்கை வழங்கி வருகின்றனர். முந்தைய சுற்றுப்பயணங்களில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்தது. தற்போது அவர்கள் ஸ்திரமாக வீசி வருகின்றனர். பெர்த்தில் புதிதாக ஆப்டஸ் மைதானத்தில் முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இதன் பிட்ச் தன்மை இந்திய பெளலர்களுக்கு சாதமாக அமையும். அஸ்வினும் சுழற்பந்து வீச்சில் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார். முந்தைய 2011, 2014 தொடர்களைக் காட்டிலும் தற்போது சிறப்பாக வீசி வருகிறார். ஒருமுனையில் அவர் ரன்களை கட்டுப்படுத்தி விட்டார். 
பெர்த் மைதானம் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவியாக இருக்கும். பெளன்ஸ் மற்றும் வேகம் அவர்களுக்கு வலிமையான ஆயுதங்கள் என்றார் அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com