வேகம், பெளன்ஸ் நிறைந்த பெர்த் பிட்ச்: பராமரிப்பாளர் தகவல்

ஆஸி.-இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் நடக்கவுள்ல பெர்த் மைதான பிட்ச் வேகம் மற்றும் பெளன்ஸ் நிறைந்ததாக இருக்கும் என பராமரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப் தெரிவித்துள்ளார்.

ஆஸி.-இந்தியா அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் நடக்கவுள்ல பெர்த் மைதான பிட்ச் வேகம் மற்றும் பெளன்ஸ் நிறைந்ததாக இருக்கும் என பராமரிப்பாளர் பிரெட் சிப்தோர்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் பெர்த்தில் பசுமை நிறைந்தபிட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேகம் மற்றும் பெளன்ஸ் நிறைந்ததாக இருக்கும் என சிப்தோர்ப் தெரிவித்துள்ளார். 
முந்தைய தொடர்களில் பெளன்ஸ்க்கு உதவும் பிட்ச்களில் இந்திய வீரர்கள் தடுமாறினர். 
உலகிலேயே அதிக வேகம், பெளன்ஸ் நிறைந்த பிட்சில் கோலி அணி ஆட உள்ளது. பெர்த் பிட்ச்சை இவ்வாறு அமைக்க வேண்டும் என கூறப்பட்டதால் அவ்வாறு வடிவமைத்துள்ளோம். காற்றில் ஈரப்பதம் சரியாக இருக்கும் பட்சத்தில் பிட்ச் சூழலும் மாறாது. 
பிட்ச் தொடர்பாக வீரர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. அனைவரும் இந்த மாதிரி பிட்சை வரவேற்றனர்.
பசுமையான பிட்ச் இரு அணிகளின் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களை பந்துவீச ஈர்க்கும். 
டாஸ் வென்று பெளலிங்கை தேர்வு செய்ய உதவும். எனினும் அதிக வெப்பம் வீசுவது கவலை தருவதாகும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com