சென்னையில் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்ற விழா: முழு விடியோ!

நான்கு மாதங்கள் ஆகும் எனக்கூறியதற்கு அதிர்ச்சி அடைந்த அவர் அந்நிலையை மாற்றினார்...
சென்னையில் தோனி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்ற விழா: முழு விடியோ!

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 70-ம் ஆண்டு, மற்றும் அதன் மேலாண்மை இயக்குநரான சீனிவாசன் கடந்த 50 ஆண்டுகளாக விளையாட்டு, தொழில்துறைக்கு ஆற்றிய சேவை தொடர்பான புத்தக வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தோனி, கவாஸ்கர், டிராவிட் உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள், தமிழ்நாடு வீரர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் சுனில் கவாஸ்கர் பேசியதாவது:

தனது கடுமையான உழைப்பின் மூலம் தமிழ்நாடு, பிசிசிஐ, ஐசிசி தலைவராக உயர்ந்தவர் சீனிவாசன். வீரர்களின் நலனைக் கருதி செயல்பட்ட சிறந்த நிர்வாகி. முன்னாள் வீரர்களுக்கு ஓய்வூதியம், ஊக்கத்தொகை போன்றவை கிடைக்க ஏற்பாடு செய்தார்.

கபில் தேவ்: நாங்கள் ஆடும் போது, சீனிவாசன் போன்றவர்கள் நிர்வாகிகளாக இல்லையே என ஏங்கும் அளவுக்கு அவரது நிர்வாக செயல்பாடு அமைந்திருந்தது. எங்கள் காலத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்று நமக்கு ஊதியம் கிடைக்குமா என ஏங்கினோம். ஆனால் அதை மாற்றி தற்போது அவர்கள் நம்மைப் போல் ஊதியம் அவர்களுக்கு கிடைக்குமா என எதிர்பார்க்கின்றனர்.

ராகுல் திராவிட்: கடந்த 1994ஆம் ஆண்டே நான் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். குருநானக் கல்லூரியில் ஆடும் போது, சாதாரண லீக் ஆட்டங்களையும் காண வருவார். வீரர்களின் நலனில் தனிப்பட்ட அக்கறை கொண்டவர். ஐசிசியிலும், இந்தியாவின் குரலை ஓங்கச் செய்தவர். 

எம்.எஸ். தோனி: நான் முதலில் சீனிவாசனை ஒரு டெஸ்ட் ஆட்டத்தின் போது தான் பார்த்தேன். அப்போது அவர் உங்களுக்கு எல்லாம் ஊதியம் எப்போது கிடைக்கிறது எனக் கேட்டார். நான்கு மாதங்கள் ஆகும் எனக்கூறியதற்கு அதிர்ச்சி அடைந்த அவர் அந்நிலையை மாற்றினார். கிரிக்கெட் தவிர, கோல்ப், பூப்பந்து, டென்னிஸ் விளையாட்டுகளிலும் அவரது பங்களிப்பு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மைதானத்தில் தீவிரமாக செயல்பட்டாலும், செம்மையாக ஆடக்கூடிய அணியாக விளங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com