விராட் கோலிக்கு எதிராக என்னால் சிறப்பாகப் பந்துவீசமுடியுமா?: வாசிம் அக்ரம் சந்தேகம்!

அவருக்குப் பந்துவீசுவது சற்று சிரமம் என்றே எனக்குத் தோன்றும். அது எந்த ஆடுகளமாக இருந்தாலும்... 
விராட் கோலிக்கு எதிராக என்னால் சிறப்பாகப் பந்துவீசமுடியுமா?: வாசிம் அக்ரம் சந்தேகம்!

விராட் கோலிக்குப் பந்துவீசுவது சிரமம் என்றே தோன்றுகிறது என முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த ஆட்டத்தில் கோலி ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் விளாசியிருந்தார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 2-ஆவது அதிகபட்ச ரன்கள். அத்துடன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். மேலும், இந்திய கேப்டனாக 12 சதங்கள் விளாசி கங்குலியின் சாதனையையும் (11 சதங்கள்) தாண்டினார்.

கோலியின் ஆட்டம் குறித்து முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் கூறியதாவது: கோலியின் ஆட்டம் பார்க்க அற்புதமாக உள்ளது. நான் இளவயது வீரனாக இருந்து விராட் கோலிக்குப் பந்துவீசுவதாக இருந்தால் அவருக்கு எப்படி பந்துவீசுவது என யோசிப்பேன். அவருக்குப் பந்துவீசுவது சற்று சிரமம் என்றே எனக்குத் தோன்றும். அது எந்த ஆடுகளமாக இருந்தாலும். ஏனெனில் எல்லா ஆடுகளங்களுக்கும் ஏற்ற வீரர் அவர். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு உலக கிரிக்கெட்டில் கோலி முக்கியமான கிரிக்கெட் வீரராக உள்ளார். நல்ல உடற்தகுதி கொண்டவர். எல்லா ஆட்டங்களிலும் ரன் எடுக்கிறார். முதல் இன்னிங்ஸ், இரண்டாவது இன்னிங்ஸ், டெஸ்ட் போட்டி, ஒருநாள், டி20 போட்டிகள் என எல்லாவற்றிலும். கோலி இந்தியாவுக்கு மட்டுமல்ல,  உலகம் முழுக்க அவரை ஆதர்சமாகக் கொள்ளலாம் என்று கோலியை மனதாரப் பாராட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com