டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு தங்கம்

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுஹானா சாய்னி தங்கப் பதக்கம் வென்றார்.

ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுஹானா சாய்னி தங்கப் பதக்கம் வென்றார்.
ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சுஹானா, தனது இறுதி ஆட்டத்தில் எகிப்தின் ஹனா கோடாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுஹானா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். முன்னதாக, ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய சுஹானா, சற்று பின்னடைவை சந்திக்க ஹனா கோடா 12-10 என முதல் செட்டை கைப்பற்றினார்.
எனினும், அடுத்த 3 செட்களில் மீண்ட சுஹானா 11-7, 11-6, 11-8 என்ற கணக்கில் வென்று ஆட்டத்தை தன் வசமாக்கி தங்கத்தை கைப்பற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com