தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் போர்ட் எலிசபெத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் போர்ட் எலிசபெத் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இந்த ஒருநாள் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் வென்ற இந்தியாவுக்கு, 4-ஆவது ஆட்டமும் சாதகமாகவே முடியும் நிலையில் இருந்தது. அவ்வாறு வென்றிருந்தால் வரலாறு படைத்திருக்கும் இந்தியா. ஆனால், தென் ஆப்பிரிக்கா அந்த வாய்ப்பை தட்டிப் பறித்துவிட்டது.
மழையால் தடைப்பட்ட அந்த ஆட்டத்தில், டக் வொர்த் லீவிஸ் முறையில் தென் ஆப்பிரிக்காவுக்கான இலக்கும், ஓவரும் குறைக்கப்பட்டன. இது, டி20 ஆட்டம் போன்ற சாதக நிலையை தென் ஆப்பிரிக்காவுக்கு வழங்க, அணியின் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டேவிட் மில்லர், பெலுக்வாயோ உள்ளிட்டோர் அடித்து விளாசி இந்தியாவின் வெற்றிக் கனவை தகர்த்தனர்.
டேவிட் மில்லரை ஆட்டமிழக்கச் செய்யும் வாய்ப்பை இந்தியா இருமுறை தவறவிட, தென் ஆப்பிரிக்கா தனது முதல் வெற்றியை பெற்றது. அத்துடன், பிங்க் ஒன்டேவில் தோற்றதில்லை என்ற பெருமையையும் தக்க வைத்துக்கொண்டது.
எனவே, எஞ்சியுள்ள 2 ஆட்டங்களும் இரு அணிகளையும் தொடரில் உயிர்ப்புடன் வைத்துள்ளது. இதில் இந்தியா ஒரு வெற்றியை பெற்றாலே தொடர் வசமாகிவிடும். தென் ஆப்பிரிக்கா இரு ஆட்டங்களிலும் வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்யவே இயலும்.
முதல் ஆட்டத்தில் இருந்தே முட்டி மோதி வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு, 4-ஆவது ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் அணிக்கு திரும்பியிருப்பது பலம்.
இந்திய அணியில், 4-ஆவது ஆட்டத்திற்கு புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. எனவே, 5-ஆவது ஆட்டத்தில் ஒரு மாற்றமாக அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். கேப் டவுன் ஆட்டத்தில் காயம் கண்ட கேதார் ஜாதவ், அணிக்கு திரும்புவதில் உறுதியில்லை.


அணிகள் விவரம்

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவன், ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, 
ஷ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், 
எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்.


தென் ஆப்பிரிக்கா

எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா, டுமினி, இம்ரான் தாஹிர், 
டேவிட் மில்லர், மோர்ன் மோர்கெல், கிறிஸ் மோரிஸ், எல்.என்.கிடி, அன்டிலே 
பெலுக்வாயோ, ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்ஸி, காயேலிலே úஸான்டோ, 
ஃபர்ஹான் பெஹார்டியன், ஹென்ரிச் கிளாசென், டி வில்லியர்ஸ்.


போர்ட் எலிசபெத்தில்...

போர்ட் எலிசபெத் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா இதுவரை ஆடிய 32 ஆட்டங்களில், 11 தோல்விகளை சந்தித்துள்ளது. அதில் 6 தோல்விகள் கடந்த 10 ஆண்டுகளில் கண்டது. 

இந்தியாவைப் பொருத்த வரையில் 1992 முதல் இம்மைதானத்தில் ஆடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட வென்றதில்லை.

அதில் 4 முறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோற்ற இந்தியா, 2001-02 காலகட்டத்தில் ஒரு ஆட்டத்தில் கென்யாவிடமும் வீழ்ந்துள்ளது. அதேபோல், 
இந்த மைதானத்தில் இந்தியா 200 ரன்கள் ஸ்கோர் செய்ததில்லை. அணியின் அதிகபட்சமே 176 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com