ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இந்தியா

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதை அடுத்து, 122 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது.

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியதை அடுத்து, 122 புள்ளிகள் பெற்று முதலிடத்துக்கு முன்னேறியது.
அதேநேரம், முதலிடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த அணி 118 புள்ளிகளுடன் உள்ளது. செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள 6-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும்பட்சத்தில் இந்தியா ஒரு புள்ளியை இழக்க நேரிடும். இருப்பினும், முதலிடத்தில் அந்த அணி நீடிக்கும்.
அதே வேளையில், கடைசி ஆட்டத்தில் ஜெயித்து 5-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றினால், மேலும் ஒரு புள்ளியை கூடுதலாகப் பெற்று 123 புள்ளிகளுடன் முதலிடத்திலேயே நீடிக்கும். இந்தப் பட்டியல் வரிசையில், 116 புள்ளிகளுடன்3-ஆவது இடத்தில் இங்கிலாந்தும், 115 புள்ளிகளுடன் அதற்கு அடுத்த இடத்தில் நியூஸிலாந்தும் உள்ளன. ஆஸ்திரேலியா (5-ஆவது இடம்), பாகிஸ்தான் (6-ஆவது இடம்), வங்கதேசம் (7-ஆவது இடம்), இலங்கை (8-ஆவது இடம்), மே.இ.தீவுகள் 9-ஆவது இடத்தில் உள்ளன.
10-ஆவது இடத்தில் ஆப்கன்: ஷார்ஜாவில் ஜிம்பாப்வே-ஆப்கானிஸ்தான் இடையே 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்திலும், மூன்றாவது ஆட்டத்திலும் ஆப்கன் வெற்றி பெற்றது.
இதையடுத்து, தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருந்து 10-ஆவது இடத்துக்கு அந்த அணி முன்னேறியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com